வெள்ளகோவில் அருகே கழிவு பஞ்சாலை எந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான எந்திரம் மற்றும் கழிவுபஞ்சுகள் எரிந்து நாசமானது.

வெள்ளகோவில் அருகே கழிவு பஞ்சாலை எந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான எந்திரம் மற்றும் கழிவுபஞ்சுகள் எரிந்து நாசமானது.

Update: 2021-08-18 17:17 GMT
வெள்ளகோவில், 
வெள்ளகோவில் அருகே கழிவு பஞ்சாலை எந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான எந்திரம் மற்றும் கழிவுபஞ்சுகள் எரிந்து நாசமானது.
கழிவு பஞ்சாலையில் தீ 
வெள்ளகோவில் அருகே உள்ள மாந்தப்புரத்தில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு என்ற பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் கண்ணபிரான் (வயது25), என்பவர் கழிவு பனியன்களில இருந்து பஞ்சு தயாரிக்கும் எந்திரம் போட்டு இயக்கி வருகின்றார். 
நேற்று பகல் 1 மணி அளவில் பஞ்சாலை எந்திரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் ஆயில் சீல் உடைந்து திடீரென தீப்பிடித்து மள மள பஞ்சு கழிவு பஞ்சுகள் மற்றும் கழிவுபஞ்சில் இருந்து பஞ்சு தயாரிக்கும் எந்திரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. 
ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்
உடனே வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகர், வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் பஞ்சு உடைக்கும் எந்திரம், கட்டிடம் கட்டிடத்தின் மேற்கூரை எரிந்து சேதம் ஆனது தொழிலாளர்களுக்கு எவ்வித காயமும் இன்றி தப்பினர்.

மேலும் செய்திகள்