ஸ்கூட்டருக்குள் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது
உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் நாராயணன். இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை அங்குள்ள விருத்தாசலம் சாலையில் நிறுத்திவிட்டு, அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வந்து, ஸ்கூட்டரை இயக்கினார். ஆனால் ஸ்கூட்டர் நகரவி்ல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஸ்கூட்டரை சாய்த்து பார்த்தபோது, சாரை பாம்பின் வால் பகுதி தெரிந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் ஒரு மணி நேரம் போராடி ஸ்கூட்டருக்குள் புகுந்த சாரை பாம்பை பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.