2 பேர் கைது

கொடைக்கானலில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-18 16:22 GMT
கொடைக்கானல்: 

கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் நேற்று வில்பட்டி அருகே பேத்துப்பாறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொன்காமராஜ் (வயது 45), வெங்கடேஷ் (40) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்