சோலார் மின்சக்தி சாதனம் அமைக்க 60 சதவீதம் மானியம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சோலார் மின்சக்தி சாதனம் அமைக்க விவசாயிகளுக்கு 60 சதவீத மானியம் அமைக்கப்படுகிறது.

Update: 2021-08-18 15:36 GMT
திண்டுக்கல்: 


திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சோலார் மின்சக்தி சாதனம் அமைக்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் விவசாய நிலங்களில் சோலார் மின்சக்தி சாதனம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயன்படுத்தாமல் வைத்துள்ள மின்வினியோக கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மின்மோட்டார் பம்புகளை சோலார் மின்சக்தி மூலமும், மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரம் மூலமும் இயங்கும் வகையில் மாற்றலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும். 

மேலும் சோலார் மின்சக்தி திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்சார வாரியத்துக்கு அளிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் பங்கு தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்