மினி பஸ்சில் ஏற முயன்றபோது தவறி விழுந்து காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

வேதாரண்யம் அருகே மினி பஸ்சில் ஏற முயன்றபோது தவறி விழுந்து காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-18 11:17 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமம் பனையடி குத்தகை பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது68). இவர் சம்பவத்தன்று செம்போடை கிராமத்திற்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக செம்போடை வடக்கு கடைத்தெருவில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மினி பஸ்சில் பத்மாவதி ஏற முயன்ற போது தடுமாறி கீேழ விழுந்து காயம் அடைந்தார். 

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்