போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம் வருகிற 2026-ம் ஆண்டு இயக்க திட்டம்
போரூர்- பூந்தமல்லி இடையேயான 7.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 2026-ம் ஆண்டு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ரூ.61 ஆயிரத்து 843 கோடி நிதியில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு வடிவமைக்கப்பட்ட 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வழித்தடங்களில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரெயில் நிலையங்களும் மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 48 ரெயில் நிலையங்களும், மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையே 50 ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன. இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்ற கட்டுமான நிறுவனங்களுக்கு பணிகள் ஒதுக்கி தரப்பட்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டுமான நிறுவனத்தினர் உயர்மட்ட பாதைகளை அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
9 ரெயில் நிலையங்கள்
பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் நசரத்பேட்டை வரை சாலையில் துளைகள் போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், போரூர்- பூந்தமல்லி இடையேயான 7.9 கிலோ மீட்டர் நீளத்தில் நடக்கும் உயர்மட்ட பாதைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் போரூர்- ஐயப்பன்தாங்கல் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணிகளை வருகிற 3 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் சென்னை புறவழிச்சாலையை கடந்து ராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பணிமனை உட்பட 9 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை 9 ரெயில் நிலையங்கள் வருகிறது. இதில் ரெயில் உயர்மட்ட பாதை 7.9 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. 118.9 கிலோ மீட்டர் நீளத்தில் மூன்று வழித்தடங்களிலும் இரண்டாம் கட்ட பணிகள் 2026-ம் ஆண்டு முடிக்கப்பட்டு மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் தான் சென்னையில் முக்கியமான பகுதிகளான மயிலாப்பூர். தியாகராய நகர், வடபழனி, ஐடி பார்க்காக வளர்ந்து வரும் போரூர் மற்றும் புறநகர் பகுதியான பூந்தமல்லி வரை இணைக்கிறது. அத்துடன் பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிமனை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. பணிகள் நடக்கும் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்துவது ஒரு புறம் இருந்தாலும், மாநகரில் பொது போக்குவரத்தின் பங்கை கூட்டுவதற்கு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.