சென்னையில் 49 இடங்களில் இலவச வை-பை வசதி மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் 49 இடங்களில் இலவச வை-பை வசதி மாநகராட்சி அறிவிப்பு.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரிப்பன் மாளிகை வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு சென்னையின் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல் அளவைக் கண்டறிதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக சென்னையின் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வை-பை தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச வை-பை பெறுவதற்கு கைப்பேசி எண்ணை பதிவு செய்து, கடவுச்சொல் (ஓ.டி.பி.) மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் இலவச வை-பை இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.