தமிழக அரசு மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்

தமிழக அரசு மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-08-18 05:20 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.850-லிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.710-லிருந்து ரூ.165, அதாவது 23 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசிய பொருளின் விலையை ஆண்டுக்கு 46 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.

சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும்; தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்