சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை ஆனது.

Update: 2021-08-17 21:55 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.892-க்கும், முல்லை ரூ.340-க்கும், காக்கடா ரூ.725-க்கும், செண்டுமல்லி ரூ.85-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை ஆனது. 
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.805-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.77-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதிமல்லி ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.87-ம், முல்லை ரூ.100-ம், காக்கடா ரூ.75-ம், செண்டுமல்லி ரூ.8-ம், பட்டுப்பூ ரூ.60-ம், ஜாதிமல்லி ரூ.150-ம், கனகாம்பரம் ரூ.300-ம், சம்பங்கி ரூ.30-ம், அரளி ரூ.40-ம், துளசி ரூ.10-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. ஒரே நாளில் கனகாம்பரம் பூ ரூ.300 விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘விசேஷ நாட்கள் வருவதால் பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது,’ என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்