ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் ஈரோடு தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. தினமும் 150-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் 170 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்த நிலையில் நேற்று புதிதாக 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96 ஆயிரத்து 592 ஆக உயர்ந்தது. இதில் 94 ஆயிரத்து 86 பேர் குணமடைந்து உள்ளார்கள்.
இதில் நேற்று மட்டும் 144 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 1,864 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 642 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.