விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல்(வயது 51). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமயந்தி(42). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தமயந்தி எலி பசையை(விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் தமயந்தியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமயந்தி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சித்திரவேல் கொடுத்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.