விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி
விபத்தில் சப்இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகமலைபுதுக்கோட்டை,
விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
தேனி மாவட்டம் போடி அருகே கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ஜெயராம் மகன் கண்ணன் (வயது 52). இவர் தேனி பழனிச்செட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 14-ந் தேதி இரவு கண்ணன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது அக்காவைப் பார்ப்பதற்காக தேனியில் இருந்து மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். இரவு 7.30 மணிஅளவில் நாகமலைபுதுக்கோட்டை அடுத்த அச்சம்பத்து அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
சிகிச்சை
இதில் படுகாயம் அடைந்த கண்ணன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். கண்ணனுக்கு ஹேமலதா என்ற மனைவியும், கிருபாகரன், கிஷோர் என்ற மகன்களும் உள்ளனர்.