நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் நிலையம் சார்பில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. துவரிமானைச் சேர்ந்த கலைத்தாய் கலைக்குழுவினர் கொரோனா பரவல் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.