கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராஜபாளையம்
ராஜபாளையம் சீனிவாசன் புதுத்தெருவை சேர்ந்தவர் முரளி என்ற பொன்னுச்சாமி (வயது 62). இவர் மீது கஞ்சா விற்பனை உள்பட 52 வழக்குகள் உள்ளதால் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாதரெட்டி குண்டர் சட்டத்தில் பொன்னுச்சாமியை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பொன்னுசாமியை வடக்கு போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.