வெங்கமேடு அரசு பள்ளியில் சேர ஆர்வம் காட்டும் மாணவ- மாணவிகள்

தனியார் பள்ளிகளில் இருந்து வெங்கமேடு அரசு பள்ளியில் சேர மாணவ- மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன்மூலம் தனியார் பள்ளிகளில் இருந்து 155 மாணவ- மாணவிகள் சேர்ந்தனர்.

Update: 2021-08-17 19:14 GMT
பரமத்திவேலூர்,ஆக.18-
தனியார் பள்ளிகளில் இருந்து வெங்கமேடு அரசு பள்ளியில் சேர மாணவ- மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன்மூலம் தனியார் பள்ளிகளில் இருந்து 155 மாணவ- மாணவிகள் சேர்ந்தனர்.
அரசு பள்ளி
பரமத்திவேலூர்‌‌ அருகே ‌பொத்தனூர், வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்‌ நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 170 மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை‌ 510 ஆக உயர்ந்துள்ளது.
2011-ம் கல்வி ஆண்டில் இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 168 ஆகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை 6 ஆகவும் இருந்தது. தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 510 ஆகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை 13 ஆகவும் உயர்ந்துள்ளது.
155 மாணவர்கள்
இந்த பள்ளியில் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 30 பேர் 8-ம் வகுப்பை முடித்து விட்டு சென்றனர். அதற்கு பதிலாக பள்ளியில் 107 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். 2021-2022-ம் கல்வி ஆண்டில் 49 மாணவர்கள் 8-ம் வகுப்பை முடித்து வெளியே சென்றனர்.
இந்த நிலையில் வேறு அரசு பள்ளியில் இருந்து 15 மாணவர்கள் வெங்கமேடு பள்ளியில் சேர்ந்தனர். இதுதவிர தனியார் பள்ளிகளில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 155 மாணவர்கள் வெங்கமேடு பள்ளியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மூலம் இந்த கல்வி ஆண்டில் புதிதாக 170 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் பெருமிதம்
மாணவ- மாணவிகள் சேர்க்கை குறித்து தலைமை ஆசிரியை‌‌ மாலதி கூறுகையில், பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்று கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக சிறப்பான கல்வி வழங்கி வருகிறோம். இதனால் மூலம் இந்த பள்ளியில் மாணவ- மாணவிகள் சேர்க்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்று பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் செய்திகள்