நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

சாயல்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-08-17 19:09 GMT
சாயல்குடி,

மத்திய அரசு கொண்டுவந்த மீன் வள மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி சாயல்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இசை அரசன், சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சசிகுமார், செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ், கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிரணி பாசறை செயலாளர் காளியம்மாள், மாணவர் பாசறை தொகுதி செயலாளர் முனீஸ்வரன் ஆகியோர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்