திருவாடானை தாலுகா, வழிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43). விவசாயி. இவர் நேற்று தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை சீந்திவயல் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. திடீரென மின்னல் தாக்கியதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவாடானை போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், பழனிகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக அவரது மனைவி ஜெயா அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.