கல்லல் பாகனேரி பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உழவு பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும் வானம் பார்த்த பூமியாக பயிருடப்பட்டுள்ள கடலை பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருத்து தெரிவித்தனர். கிணற்று பாசனத்தின் மூலமாக காய்கறி சாகுபடி செய்பவர்களுக்கு இந்த மழை பயன் உள்ளதாக இருந்தது. 2 நாள் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.