அனுமதியின்றி மஞ்சு விரட்டு; 200 பேர் மீது வழக்கு

சிவகங்கை அருகே அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடந்தது. இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2021-08-17 18:31 GMT
சிவகங்கை,
சிவகங்கை அருகே அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடந்தது. இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மஞ்சுவிரட்டு

சிவகங்கையை அடுத்த கோமாளிபட்டியில் கோவில் திருவிழாவையொட்டி அனுமதியின்றி அங்குள்ள கண்மாய் கரையில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான காளைகள் கலந்து கொண்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினார்கள். இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

200 பேர் மீது வழக்கு

 இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததாக சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோமாளிபட்டியை சேர்ந்த மாணிக்கம், ஏலப்பன், முனியசாமி, சின்னகண்ணு, அண்ணாமலை, கருப்பையா, குருபாதம், வெள்ளைச்சாமி, வீரையா உள்பட 200 பேர் மீது சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்