தரகம்பட்டி,
வேன் மோதியது
திருச்சி மாவட்டம் மத்தகிரி அருகேயுள்ள வெள்ளப்பெருக்கியூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவர் சொந்தவேலையின் காரணமாக தரகம்பட்டி அருகே உள்ள வாழ்வார்மங்கலம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து தோகைமலை பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது மோதியது.
முதியவர் பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்காரன்பட்டியை சேர்ந்த மதியழகன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.