திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
77 பேருக்கு கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2 பேர் பலி
இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 268-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 481-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 891 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 896-ஆக உள்ளது.