தர்மபுரியில் வருவாய் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரியில் வருவாய் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரியில் வருவாய் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வருவாய் ஆய்வாளர்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை தட்சிணாமூர்த்தி மடத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவரது மனைவி ரேகா, இவர்களுக்கு திவ்யதர்ஷினி (8) என்ற ஒரு மகள் உள்ளாள். கணேசன் மாரண்டஅள்ளியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கணேசனுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணேசனுக்கும், அவரது மனைவி ரேகாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே ரேகா மகளுடன் திருப்பத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மன வேதனையில் இருந்த கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வருவாய் ஆய்வாளர் கணேசன் குடும்பத்தகராறு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.