சூளகிரியில் ரூ.12 லட்சம் கர்நாடக மதுபானங்கள் அழிப்பு

சூளகிரியில் ரூ.12 லட்சம் கர்நாடக மதுபானங்கள் அழிக்கப்பட்டன.

Update: 2021-08-17 16:30 GMT
சூளகிரி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர், சூளகிரி வழியாக கடத்தி வரப்பட்ட கர்நாடக மதுபாட்டில்கள், பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை நேற்று சூளகிரி பக்கமுள்ள அலகுபாவி என்ற இடத்தில், வட்டார மதுவிலக்கு பிரிவு அதிகாரி ராமச்சந்திரன், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், அலுவலர்கள் கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் செய்திகள்