ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.