பெண் புரோக்கர் உள்பட 4 பேர் கைது

பெண் புரோக்கர் உள்பட 4 பேர் கைது

Update: 2021-08-17 15:35 GMT
பெண் புரோக்கர் உள்பட 4 பேர் கைது
கோவை

கோவை வடவள்ளியில் உள்ள டீக்கடையில் வாலிபர் ஒருவர் டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள் அந்த வாலிபரிடம் தங்களிடம் அழகிகள் உள்ளனர். பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் அவர்களுடன் சென்று அழகிகளை பார்த்து உள்ளார். 

பின்னர் ஏ.டி.எம். சென்று பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு அங்கிருந்து சென்று வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது.

 இதையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து புரோக்கர்களாக செயல்பட்ட மும்பையை சேர்ந்த விக்ரம் (வயது 35), கர்நாடகாவை சேர்ந்த மன்டேஷ் விரகன்டப்ப மதர் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல் குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சாதாரண உடையில் அந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது. 


இதையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட கணபதியை சேர்ந்த தஷ்லிம் (32), ஜாஸ்மின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்