கர்ப்பிணிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி நடந்தது.
உத்தமபாளையம்:
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சித்தா டாக்டர் சிராஜ்தீன் யோகா பயிற்சி அளித்தார்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி டாக்டர் சுதா கூறும்போது, கர்ப்பிணிகளுக்கு எளிய பிரசவத்திற்காக பல்வேறு உடற்பயிற்சி மற்றும் யோகாசன பயிற்சிகள் இங்கு கற்று தரப்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து, கர்ப்பிணிகள் இலவசமாக அனைத்து பயிற்சிகளும் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.