ஜோலார்பேட்டை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் உள்ள மண்டலவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே இன்று காலை 8 மணி அளவில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 10 அடி நீள மலைப்பாம்பை சுமார் அரை மணி நேரம் போராடி பிடித்தனர்.
பிடிப்பட்ட மலைப்பாம்பு திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை அவர்கள் ஏலகிரிமலை காட்டில் விட்டனர்.