செய்துங்கநல்லூர் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
செய்துங்கநல்லூர் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் சுந்தரம் என்ற கோட்டை (வயது 21). இவர் கடந்த மாதம் 29-ந்தேதி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்துங்கநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுந்தரம் என்ற கோட்டையை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.