மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி
வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 25), தையல் தொழிலாளி. கேத்தாண்டப்பட்டி பகுதியை ேசர்ந்தவர் மணிகண்டன் (35), கட்டிட மேஸ்திரி.
இவர்கள் இருவரும் இன்று காலை மல்லகுணடாவில் இருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் ஜீவா நகர் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 வாலிபர்கள் பலி
இதில் ஜெய்சங்கர், மணிகண்டன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் நடந்த இடம் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் மேல் விசாரணைக்கு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
டிரைவர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மேடவாக்கம் செய்த பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் மனோஜ் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.