இந்திய ஜனநாயக கட்சியின் கொடிக்கம்பம் திருட்டு
இந்திய ஜனநாயக கட்சியின் கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தின் முன்பு, 30 அடி உயர கட்சி கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அந்த கொடி கம்பம் கழற்றி கீழே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கொடி கம்பத்தை நேற்று முன்தினம் 2 மர்மநபர்கள் சரக்கு ஆட்டோவில் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.