குடிநீர் கேட்டு சாலை மறியல் முயற்சி
குடிநீர் கேட்டு சாலை மறியல் முயற்சி நடந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி கிராமத்தின் கிழக்குத் தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் ெசய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அழகுதுரை, மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. அதனை உடனடியாக சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும், என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.