சேலம் மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் 130 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மாவட்டம் முழுவதும் 123 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகர் பகுதியில் 20 பேர் பாதிக்கப்பட்டனர்.
அதே போன்று கொங்கணாபுரம், சேலம் ஒன்றிய பகுதியில் தலா ஒருவர், சங்ககிரி, மகுடஞ்சாவடியில் தலா 2 பேர், காடையாம்பட்டியில் ஒருவர், வீரபாண்டி, நங்கவள்ளியில் தலா 3 பேர், மேச்சேரி, கொளத்தூரில் தலா 7 பேர், ஓமலூரில் 9 பேர் பாதிக்கப்பட்டனர். அதே போன்று ஆத்தூர், பனமரத்துப்பட்டியில் தலா ஒருவர், வாழப்பாடியியல் 2 பேர், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 8 பேர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்கள் உள்பட 123 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.