அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-16 20:30 GMT
திருமங்கலம், 
திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சார்பாக தமிழக அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தின் போது ஒன்றிய அலுவலகம் முன்பு 50- க்கும் மேற்பட்டோர் திரண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தேர்தல் சமயத்தின்போது கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சந்திரபாண்டி, ஊழியர்கள் மணிவண்ணன், இளங்கோ உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்