சட்டவிரோதமாக மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

சட்டவிரோதமாக மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-16 19:15 GMT
லாலாபேட்டை, 
லாலாபேட்டை அருகே சிலர் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மேல பஞ்சபட்டியை சேர்ந்த மலர் (வயது 40) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மேட்டு மகாதானபுரத்தில் சங்கர் (47) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். சங்கரை கைது செய்த போலீசார்  10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்