காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6.45 மணிக்கு மேல் லேசான மழை பெய்ய தொடங்கி அதன் பின்னர் பலத்த மழையாக நீடித்தது. இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் காரைக்குடி பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.