போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

மானாமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-16 18:06 GMT
சிவகங்கை,

மானாமதுரை அடுத்த மேலநெட்டூர் மனக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 19). இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுதொடர்பாக சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலகா ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்