நேரடி வகுப்புகள் தொடங்கின
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின.
திருவாரூர்;
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மாணவர்கள் இணைய வழியாக வகுப்புகளில் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் உரிய வழிகாட்டுதல் வழிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டது.
கிருமி நாசினி
அதன்படி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் அரசின் வழகாட்டுதலின்படி முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தனர். மேலும் கல்லூரி வாசலில் கைகளை சுத்தம் செய்து கொள்ள கிருமிநாசினி உள்பட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் செய்திருந்தார்.
மேலும் வகுப்பறைகளில் உரிய இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்து பாடங்கள் நடத்தப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அறிவுறுத்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டதால் மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.