ஆற்காடு அருகே தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
ஆற்காடு
ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜலால் (வயது 35), கூலித்தொழிலாளி. இவர், சம்பவத்தன்று சைக்கிளில் வேலைக்கு சென்றார். மேல்விஷாரத்தை அடுத்த தென்னந்தியலம் தனியார் திருமண மண்டபம் அருகே செல்லும் போது சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.