மீன்வள மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மீன்வள மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி, ஆக.
மீனவர்களை பாதிக்கும் தேசிய மீன்வள மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் மணவெளி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில பொருளாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ட உரையாற்றினார்.
தொகுதி தலைவர் தனசேகர், செயலாளர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க பாசறை ரமேஷ், மகளிர் பாசறை கவுரி, மாநில செய்தி தொடர்பாளர் திருமுருகன், இளைஞர் பாசறை மணிபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.