பள்ளிபாளையம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; அரிசி வியாபாரி பலி

பள்ளிபாளையம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; அரிசி வியாபாரி பலி

Update: 2021-08-16 16:59 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை லட்சுமிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காலை எஸ்.பி.பி. காலனியில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது டி.வி.எஸ் மேடு பகுதி அருகே சென்றபோது, தங்கவேல் மொபட்டை வலதுபுறமமாக திருப்ப முயன்றபோது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. 
இதில் பலத்த காயம் அடைந்த தங்கவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடுக்கு கொண்டு செல்லும்போது வழியில் தங்கவேல் இறந்து விட்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தங்கவேலுக்கு ராதா (40) என்ற மனைவி உள்ளார்.
========

மேலும் செய்திகள்