கல்லூரிகளை இணைக்கும் இரும்பு பாலம் அகற்றப்படுகிறது
கல்லூரிகளை இணைக்கும் இரும்பு பாலம் அகற்றப்படுகிறது;
கோவை
கோவை - அவினாசி ரோட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1,621 கோடி செலவில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இது 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 4 இடங்களில் ஏறுதளங்கள், 4 இடங்களில் இறங்கு தளங்கள் அமைக்கப்படுகிறது.
உயர் மட்ட பாலம் கட்ட முதல் கட்டமாக சாலையின் நடுவில் மொத்தம் 306 காங்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பீளமேடு ராதாகிருஷ்ணா பஸ் நிறுத்தம் அருகே சாலையின் இருபுறமும் உள்ள தனியார் கல்லூரிகளை இணைக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புபாலம் அமைக்கப்பட்டது.
தற்போது அவினாசிரோட்டில மேம்பால பணிக்காக இந்த இரும்பு பாலம் அகற்றப்பட உள்ளது. அதற்கான பணிகளை கல்லூரி நிர்வாகத்தினர் தொடங்கி உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, இரும்பு பாலத்தை அகற்ற அக்டோபர் மாதம்வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்றனர்.