அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-16 14:49 GMT
திண்டுக்கல்: 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் கிளை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட கிளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். 

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி அனைவரையும் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதேபோல் பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்ட கிளை துணைத்தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்களபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் மகாராஜா உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

முன்னதாக திண்டுக்கல் மற்றும் பழனியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் பணியாளர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியாற்றினர். 

மேலும் செய்திகள்