கருப்பு கிளார் கிராமத்தில் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கருப்பு கிளார் கிராமத்தில் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.;

Update: 2021-08-16 13:28 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்பு கிளார் வடக்கு தெருவில் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய வீடுகளை சுற்றிலும் வயல்கள் உள்ளன. இந்த பகுதியில் கழிவறை வசதி இல்லை.

இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த சுகாதார வளாகம் சேதம் அடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிவறையின்றி தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து மகளிர் சுய உதவிக்குழுவினிடம் ஒப்படைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்