திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-16 13:20 GMT
சேத்துப்பட்டு

திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள பெலாகாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 38), கூலித்தொழிலாளி. 

இவர் திருமணம் செய்து கொள்ள பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு யாரும் ெபண் கொடுக்க முன்வரவில்லை.

 திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்த பாலாஜி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

 அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்