திருமணமான 8 மாதத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 8 மாதத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.

Update: 2021-08-16 02:59 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நாச்சியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா (20). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது.

கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு எங்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் சுற்றித்திரிவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் மது போதையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கல்பனா அதே பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று காலை வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த கல்பனா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி, மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்