மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ராக்கு (வயது 65). இவர் நேற்று மதியம் ஆண்டிபட்டி பங்களாவில் சாலையோரம் நடந்து சென்ற போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் ராக்கு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.