ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கோத்தகிரியில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரியில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் தடுப்பூசி போட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சதுக்கம், மிஷன் காம்பவுண்ட், புயல் நிவாரண கூடம், கேர்பன், இடுகொரை, அம்பேத்கார் நகர், காத்துக்குளி, தவிட்டு மேடு, கணபதி நகர் உள்ளிட்ட 9 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. அதில் மொத்தம் 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோன்று கோத்தகிரி கிராம பகுதிகளான மூணுரோடு, ஜக்கனாரை, குஞ்சப்பனை, அரவேனு, கெட்டிக்கம்பை, வ.உ.சி. நகர், கப்பட்டி, ஈளாடா, கெரடாமட்டம், அரவேனு உள்ளிட்ட இடங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் 1000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியும், முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 84 நாட்கள் நிறைவு பெற்ற 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது.
கூட்டம் குறைவு
மேலும் முகாம்களில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டது. வழக்கமாக கோத்தகிரி நகரில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டு செல்வது வழக்கம்.
ஆனால் நேற்று முன்தினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த முகாம்களில் தடுப்பூசி போட வந்த பொதுமக்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.