பள்ளிபாளையத்தில் பாலிஷ் போட்டு தருவதாக பெண்ணிடம் நகை மோசடி 2 பேர் கைது

பள்ளிபாளையத்தில் பாலிஷ் போட்டு தருவதாக பெண்ணிடம் நகை மோசடி 2 பேர் கைது

Update: 2021-08-15 20:31 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் கோட்டைக்காடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கிரேன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (29). பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவர்கள் 2 பேரும் முத்துவுக்கு நன்கு தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
அதன்பேரில் 2 பேரும் அடிக்கடி முத்து வீட்டுக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வளர்மதி வீட்டில் சோப் தண்ணீரில் நகையை கழுவி கொண்டிருந்த போது பழனிசாமி, வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது பழனிச்சாமி தனது மாமனார் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடும் கெமிக்கல் வைத்துள்ளார். நான் பாலிஷ் போட்டு தருகிறேன் என கூறி ஒரு செயினை வாங்கிக் கொண்டு பாலிஸ் போட்டு திருப்பி கொண்டு வந்து கொடுத்துள்ளார். 
பின்னர் பழனிசாமி மீண்டும் வளர்மதி வீட்டிற்கு வந்து அவரிடம் மீதி நகைகளை கொடுங்கள் பாலிஸ் போட்டு தருகிறேன் என கூறி 18½ பவுன் தங்க சங்கிலிகளை வாங்கி கொண்டு சென்றுவிட்டார். ஆனால் நீண்ட நாளாகியும் நகையை திருப்பி கொடுக்காததால் வளர்மதி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது பழனிச்சாமியும், வெங்கடேசனும சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினர்.
இதுகுறித்து வளர்மதி பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெண்ணிடம் நகை மோசடி செய்த பழனிச்சாமி, வெங்கடேஷ் ஆகியாரை கைது செய்ததுடன், நகைகளையும் மீட்டனர்.
=======

மேலும் செய்திகள்