போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பாளையங்கோட்டையில் போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 20).இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.