கொடைக்கானல் சுற்றுலா சென்ற வாலிபர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் பலி

கொடைக்கானல் சுற்றுலா சென்ற வாலிபர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் பலியானார்.;

Update: 2021-08-15 20:00 GMT
திருச்சி
கொள்ளிடம் டோல்கேட்
 சென்னை முத்தமிழ் நகரை சேர்ந்த ராம் மகன் கிருஷ்ணராமன் (வயது 22), திருவள்ளூர் மாவட்டம், கட்டபொம்மன் சாலையை சேர்ந்த ஜெயராமன் மகன் சதீஷ் (22). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி நெ.1 டோல்கேட் அருகே வந்தபோது பின்புறம் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த மற்றொரு வாகனம் கிருஷ்ணராமன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற 2 வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்